சினிமா செய்திகள்
அஜித் ஏன் பேட்டி கொடுப்பதில்லை தெரியுமா? இதோ நீயா நானா கோபிநாத் பகிர்ந்து கொண்ட சீக்ரெட்

நடிகர் அஜித், மீடியாக்கள் மற்றும் பொதுவெளியில் பேட்டி கொடுப்பதில்லை. மேலும், அவர் பட புரமோஷன்களில் கூட கலந்து கொள்வதில்லை. இதற்கான காரணத்தை விஜய் டிவியின் தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
பில்லா படத்தின் போது நடிகர் அஜித் நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் டிவிக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். ஆனால், அதற்கு அப்புறம் இன்னமும் பேட்டி கொடுக்கவில்லை.
அஜித்தை கோபிநாத் தான் பேட்டி எடுத்தார். பேட்டியின் போது கூட கவனமாக கேள்விகளை உள்வாங்கி நிதானமாகவே அஜித் பதிலளித்தார்.
பின்னர் தன்னிடம் அஜித் சில நேரம் பேசினார். அப்போது, “மீடியாக்களில் நான் பேட்டிக் கொடுக்காததற்கான உண்மையான காரணம் என்னவென்றால், ஆரம்பத்தில் எனக்கு தமிழ் சரியாக பேசத் தெரியாது. தமிழ் நடிகருக்கு தமிழ் தெரியவில்லையே என பலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆங்கிலத்தில் நான் பேட்டிக் கொடுத்தாலும், அதே பிரச்சனை தான் எழும். வேறு சிலரோ நான் தெரியாமல் பேசியதை திரித்து வேறு மாதிரி கிளப்பி விட்டு விடுவார்கள் பேசாமல் விட்டுவிட்டாலோ தலை கணத்தால் பேச மறுக்கிறார் என கூறுவார்கள். இதனாலேயே பேட்டிக் கொடுப்பதை தவிர்த்து விடுகிறேன்” என அஜித் தன்னிடம் கூறினார் என கோபிநாத் மனம் திறந்துள்ளார்.













