Connect with us

சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராயை வம்புக்கு இழுத்த விவேக் ஓபராய்!

Published

on

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து வெளியான மீம் ஒன்றை நடிகர் விவேக் ஓபராய் ஷேர் செய்து, கமெண்ட் செய்துள்ளார். அந்த பதிவிற்கு 18 ஆயிரம் பேர் கமெண்ட் செய்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிஎம் நரேந்திர மோடி படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், பாஜகவின் முழு நேர விசுவாசியாகவே மாறிவிட்டார். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் க்ரியேட் செய்த மீமை பதிவிட்டு, நல்ல க்ரியேட்டிவ், இதில் அரசியல் இல்லை இதுதான் வாழ்க்கை என்ற கமெண்டை பதிவிட்டார்.

அந்த மீமில் ஒபினியன் போலுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் சல்மான் கானுடன் இருந்த புகைப்படத்தையும், எக்ஸிட் போல் என்ற இடத்தில் விவேக் ஓபராய் மற்றும் ஐஸ்வர்யா இருந்த புகைப்படத்தையும் ரிசல்ட் என்ற இடத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் உள்ள புகைப்படத்தையும் வைத்து மீம் க்ரியேட் செய்து கிண்டலடித்துள்ளனர்.

கொஞ்சம் கூட நாகரிகம் அற்ற முறையில் உருவாக்கப்பட்ட இந்த மீமை விவேக் ஓபராய் ஷேர் செய்ததால், அவருக்கு ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதில், முக்கியமாக நடிகை சோனம் கபூர், இது அருவருப்பான ஒன்று என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
No monthly fees.