சினிமா
நந்தினியின் பிடியில் குந்தவை.. மணிரத்னம் காலில் மீண்டும் விழுந்த ஐஸ்வர்யா ராய்!

மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷனல் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிடியில் த்ரிஷா இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாகவும் ஊமை ராணியாகவும் நடித்து மிரட்டிய ஐஸ்வர்யா ராயின் நடிப்புக் குறித்து இயக்குநர் மணிரத்னம் மேடையில் பாராட்ட, உடனடியாக எழுந்து சென்ற ஐஸ்வர்யா ராய் இயக்குநர் மணிரத்னம் காலில் விழுந்து தனது நன்றியை தெரிவித்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

#image_title
பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் இன்னும் 2 தினங்களில் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை சென்னை, மும்பை, டெல்லி, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு என பல நகரங்களில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ப்ரமோட் செய்து வருகின்றனர்.
தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் இந்த படத்துக்கான ப்ரமோஷனகளை செய்தால் ஓவர்சீஸிலும் நல்ல கலெக்ஷன் வரும் என கூறுகின்றனர். ஆனால், அந்த அளவுக்கு அதற்கான முயற்சிகளை இயக்குநர் மணிரத்னமோ அல்லது லைகா நிறுவனமோ எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title
வட மாநிலங்களில் கூட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து இந்த படத்துக்கு பெரியளவில் ப்ரமோஷன் செய்தால் தான் முதல் பாகம் பெற முடியாத வசூல் வேட்டையை அங்கே இரண்டாம் பாகமாவது செய்யும் என சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை த்ரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் கதைப்படி எதிரிகள். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் இணைந்து செல்ஃபி எடுப்பதும் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து விளையாடுவதாக என்ஜாய் செய்து வருகின்றனர்.