சினிமா செய்திகள்
உலகம் முழுக்க தமிழில் ப்ரோமோஷன்: எதிர்ப்பார்ப்பை கிளப்பிய பொன்னியின் செல்வன்-2!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா மூவியாக இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன்-1
கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு பின்னர், 2 ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க தொடங்கியது. இப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
பொன்னியின் செல்வன்-2
லண்டன் மற்றும் துபாய் என உலகம் முழுவதிலும் விளம்பரம் செய்யப்படும் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷனானது, முழுக்க முழுக்க தமிழிலேயே செய்யப்படுகிறது. ஒரு வேனில் பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் டிரைலர் தமிழிலேயே திரையிடப்பட்டு, விளம்பரப்படுத்தப்படுகிறது. தமிழர்களின் வரலாற்றை உலகம் முழுவதும் கொண்டாடும் திரைப்படமாக உருவாக்கி, அதனை தமிழிலேயே ப்ரோமோஷன் செய்யப்படுவது, தமிழர்களுக்கு உண்டான பெருமையாகவே பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உலகம் முழுவதிலும் ஒரு திரைப்படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனமாக லைக்கா ப்ரொடக்சன் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.