சினிமா
ஐஸ்வர்யா மகளிடமே வேலையை காட்டிய யூடியூபர்கள்; அதிரடியாக என்ன பண்ணாரு தெரியுமா?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இன்று வரை திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராயின் அன்பு மகள் ஆராத்யா பச்சன் உடல் நிலை குறித்து தவறான தகவல்களை சில யூடியூப் சேனல்கள் வேண்டுமென்றே பரப்பியதாக அதிரடியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆராத்யா வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் நடிகர்களின் வாரிசுகள் மீது அடிக்கடி மீடியா வெளிச்சம் படுவது இயல்பான ஒன்று தான். குழந்தைகளாக இருக்கும் போதே லைம் லைட்டில் வரும் அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் பாலிவுட்டில் நடிகர்களாக மாறி வருகின்றனர்.

#image_title
இந்நிலையில், 11 வயதான அமிதாப் பச்சனின் பேத்தி ஆராத்யா பச்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு ஒட்டுமொத்த பாலிவுட்டின் பார்வையையும் கவர்ந்துள்ளது.
10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தனது உடல்நிலை குறித்து பொய்யான செய்திகளை பரப்பி தனக்கும் தனது குடும்பத்துக்கும் மன உளைச்சலை ஆளாக்கி உள்ளனர் என ஆராத்யா பச்சன் அதிரடியாக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
தன்னைப் பற்றி தவறாக அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்களை தடை செய்யவும் தன்னைப் பற்றி வெளியான வீடியோக்களை டெலிட் செய்யவும் ஆராத்யா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

#image_title
சிறு வயதில் இருந்தே ஆராத்யா பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் அனைத்து சினிமா விழாக்களுக்கும் அழைத்துச் செல்கிறார். பொன்னியின் செல்வன் 2 படத்தில் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்குபெற வில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்தின் ஏகே 62 படத்தில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கப் போகிறாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஏகே 62 படத்தின் அப்டேட் மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.