சினிமா
சல்மான் கானுக்கு ஏப்ரல் 30ம் தேதி தான் கடைசி நாள்; ராக்கி பாய் வெளியிட்ட கொலை மிரட்டல்!

பாலிவுட்டில் எந்தவொரு கான் நடிகருக்கும் இதுவரை இப்படியொரு தொடர் கொலை மிரட்டல் வரவே இல்லை. அதுவும் கேஜிஎஃப் மான்ஸ்டர் ராக்கி பாயின் பெயர் கொண்டு மர்ம நபர் ஒருவர் சல்மான் கானுக்கு ஏப்ரல் 10ம் தேதி இரவு 9 மணியளவில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
கட்டுப்பாட்டு அறையில் அந்த கொலை மிரட்டலை கேட்ட போலீஸார் உடனடியாக ஒரு ஸ்பெஷல் டீம் அமைத்து அந்த மர்ம நபரை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

#image_title
அஜித், தமன்னா நடிப்பில் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது தான் இப்படியொரு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.
அதுவும் சரியாக வரும் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல் சல்மான் கான் உயிரோடவே இருக்க மாட்டார் என்கிற பகீரை அந்த நபர் கிளப்பி இருப்பது பாலிவுட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

#image_title
ஏற்கனவே தனது உயிரை பாதுகாக்க, அதிக திறன் கொண்ட நிஸான் புல்லட் ப்ரூஃப் காரை சுமார் 2 கோடிக்கும் அதிகமாக செலவிட்டு வாங்கி இருக்கிறார் சல்மான் கான். தனது பாடி கார்டுகளையும் அதிகரித்து எங்கே சென்றாலும், அவர்களுடனே சென்று வருகிறார்.
வரும் ஏப்ரல் 21ம் தேதி ரம்ஜானை முன்னிட்டு சல்மான் கான் நடித்துள்ள அந்த படமும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இப்படியொரு கொலை மிரட்டல் வர என்ன காரணம், யார் இதனை செய்கின்றனர் என்பதை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கொலை மிரட்டல் வந்த நிலையில் தான் பாதுகாப்பு அம்சங்களை சல்மான் கான் அதிகரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பை போலீஸார் 16 வயது சிறுவனை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.