Connect with us

சினிமா செய்திகள்

சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்க.. சூர்யா பதில் சொல்ல.. ட்விட்டரில் நடந்த செம ரகளை!

Published

on

சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாவதால், படக்குழு புரமோஷன் வேளைகளில் படுபிசியாக உள்ளனர். மெர்சல் படத்தில் விஜய்யின் ட்விட்டர் எமோஜி வெளியிட்டதை போல சூர்யாவின் என்ஜிகே எமோஜியை இன்று வெளியிட்ட சூர்யா, ரசிகர்களின் சுவரஸ்யமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அப்போது, சூர்யாவிடம், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு எந்த வீரரை பிடிக்கும் என சூர்யாவின் ரசிகராக மாறிய சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியதும், நீங்கள் கேள்வி கேட்டது எனக்கு இன்பதிர்ச்சியாக இருக்கிறது சுரேஷ் ரெய்னா, எனக் கூறிய சூர்யா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தான் தனக்கும் ஃபேவரைட் என்று சொன்னார்.

இவர்களது இந்த உரையாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. மேலும், ஜோதிகாவுடன் சேர்ந்து படம் பண்ணுவீங்களான்னு கேட்கப்பட்ட கேள்விக்கு, விரைவில் அது நிறைவேறும் என்றார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி கிராண்ட் ரிலீஸ் ஆகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pifteau henri biolinker.