சினிமா செய்திகள்
விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண அழைப்பித இணையத்தில் வைரல்!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், தனது மனைவியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்தார் என்பதும் அதன் பின்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் அவர் நெருங்கி பழகி வந்தார் என்பதும் தெரிந்ததே.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அடுத்து திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் ஜுவாலா கட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் விஷ்ணுவுக்கும் தனக்கும் ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் என்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் தங்களது திருமண பத்திரிகையின் புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
LIFE IS A JOURNEY….
EMBRACE IT…HAVE FAITH AND TAKE THE LEAP….
Need all your love and support as always…@Guttajwala#JWALAVISHED pic.twitter.com/eSFTvmPSE2
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) April 13, 2021



















