சினிமா செய்திகள்
நடிகர் சூரி சென்னை காவல்துறையில் ஆஜர்: என்ன காரணம்?

பிரபல காமெடி நடிகர் சூரி இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன .
முன்னாள் டிஜிபி மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சூரி பணமோசடி புகார் அளித்தார். இந்த புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தன்னிடம் 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக அந்த பணத்தை அவர் வாங்கி வைத்திருந்தார் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறை முன் நடிகர் சூரி ஆஜராகி, இந்த வழக்கு குறித்து வாக்குமூலம் அளிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

















