சினிமா
செகண்ட் மேரேஜ் செய்த ஹீரோவுடன் ஜோடி சேரப்போகும் ஷங்கர் மகள்!

ஹீரோயினாக அறிமுகமானாலும் ஒவ்வொரு படத்தையும் முடித்து விட்டு அவசரப்படாமல் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான இவர் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு நடிகையாக மாறி உள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

#image_title
இந்நிலையில், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது மனைவியை திருமணம் செய்து வாழ்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் உடன் ஜோடிப் போடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிம்புவுடன் கொரோனா காதல் படத்தில் கமிட்டான அதிதி ஷங்கர் அந்த படத்தில் இருந்து சிம்பு வெளியேறிய நிலையில், இவரும் நைஸாக எஸ்கேப் ஆகிவிட்டார்.

#image_title
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் விஷ்ணு விஷால் மீண்டும் தன்னை இந்த நிலைமைக்கு உயர்த்தி விட்ட இயக்குநர் ராம்குமார் படத்தில் நடிக்க உள்ளார்.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமார் தனுஷ் படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளை வீணடித்து கடைசியில் தனுஷ் படம் கிடைக்காமல் போன விரக்தியில் தவித்து வந்த நிலையில், மீண்டும் விஷ்ணு விஷால் நாம படம் பண்ணுவோம் என ராம்குமாரை அழைத்திருக்கிறார்.
இந்நிலையில், அந்த படத்தில் தான் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் வெளியாக உள்ளன.