சினிமா செய்திகள்
பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் விஷ்ணு விஷால்: மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
Published
10 months agoon
By
Shiva
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் நடிகர் விஷ்ணு விஷால் இணைந்து நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எப்.ஐ.ஆர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அவருடைய விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’கட்டா குஸ்தி’ எனவும், தெலுங்கில் ’மட்டி குஸ்தி’ எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளிலும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜஸ்ட் பிரபாகரன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Yes …@RaviTeja_offl sir is producing my tamil/telugu bilingual along with @VVStudioz …
So elated …#GattaKusthi (tamil)#MattiKusthi (telugu)
Tamil motion poster : https://t.co/s4PcUazPdX
Telugu motion poster : https://t.co/JNcJEBa5Bn pic.twitter.com/LcFD9ivgYn— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) April 5, 2022
You may like
-
நானும் வாரிசு படத்துக்கு போட்டியா வரலாமா? வால்டர் வீரய்யா மூலம் சிரஞ்சீவி செய்த சம்பவம்!
-
மறைந்த ஹரி வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்: பிரபல நடிகர் அறிவிப்பு
-
நடிகர் சூரி சென்னை காவல்துறையில் ஆஜர்: என்ன காரணம்?
-
சிங்கம்-நரி கதை சொல்லும் விஷ்ணு விஷால்: ‘மோகன்தாஸ்’ டீசர்
-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ!
-
விஷ்ணுவிஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!