சினிமா செய்திகள்
பிகில் மைக்கேலின் புதிய லுக்; விஜய் ரசிகளுக்கு மேலும் ஒரு ட்ரீட்…!

விஜய் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக நேற்று மாலை முதலே ஃபர்ஸ்ட் லுக், செக்கெண்ட் லுக் என போஸ்ட்டர்களை வெளியிட்டு வருகிறது பிகில் படக்குழு.
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஓரு ஆச்சரியமாக மூன்றாவது போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளனர்.
இதில் பிகில் மைக்கேல் சைக்கிள் செயின், லுங்கி என சண்டைக்குக் கிழம்புவது போல உள்ளது.
My favorite look ⭐️ #bigil pic.twitter.com/RmIgAV2s0Z
— Aishwarya Kalpathi (@aishkalpathi) June 22, 2019
பெண்கள் அணியின் கால் பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வெளியான போஸ்ட்டர்களில் அப்படி ஏதும் தெரியவில்லை.
மேலும் நயன்தாரா இருப்பது போன்ற போஸ்ட்டரும் வெளியாகவில்லை. அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளார். எப்படியும் டீசர் அல்லது டிரெய்லர் வரும் போதுஎந்த மாதிரியான கதை அம்சன் கொண்ட படம் இது என்று தெரிந்துவிடும்.





















