சினிமா செய்திகள்
ஒரே படத்தில் விஜய்-மகேஷ்பாபுவா? இசையமைப்பாளர் தமன் பதிவால் பரபரப்பு!

பிரபல இசையமைப்பாளர் தமன் பதிவு செய்த ஒரு பதிவில் விஜய் மற்றும் மகேஷ்பாபு ஒரே படத்தில் இருப்பது போன்று இருப்பதால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்காரு வாரி பட்டா. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மகேஷ்பாபு காரில் இருந்து இறங்கி வருவது போன்று இருந்த இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மகேஷ்பாபு காரில் இருந்து இறங்கி வரும் புகைப்படத்தில் விஜய் கார் ஓட்டுநர் சீட்டில் உட்கார்ந்து இருப்பது போல் உள்ளது.
ரசிகர் ஒருவர் மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள விஜய் புகைப்படத்தையும் ‘சர்காரு வாரி பட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் இணைத்து கற்பனையாக உருவாக்கிய இந்த போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் தமன் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து இசையமைப்பாளர் தமன் ’இந்த ஃபேன்மேட் போஸ்டரை தற்போது தான் பார்த்தேன். மிகவும் அருமை. தளபதி விஜய் மற்றும் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு ஒரே படத்தில் இருப்பது பெரும் ஆச்சரியம் என்று கூறியுள்ளார்.
மேலும் இது உண்மையாக வேண்டும் என்று பல ரசிகர்கள் இதற்கு கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் மற்றும் மகேஷ்பாபு நடித்து வரும் ‘சர்காரு வாரி பட்டா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Wahhhh !! Saw this jus NOOOW !! #ThalapathyVijay #SuperstarMahesh #SuperStarBirthdayBLASTER ???????????????????? pic.twitter.com/YqbGGkQYDS
— thaman S (@MusicThaman) August 6, 2021





















