சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வனுக்குப் போட்டியாக ‘கொற்றவை’- அதகளப்படுத்தும் டீசர்!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலின் அடிப்படையில் இந்தப் படம் நட்சத்திரப் பட்டாளத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இன்னொரு பழங்கால புனை கதை வடிவில் உருவாகி வரும் திரைப்படம் ‘கொற்றவை’. பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் சி.வி.குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
முன்னதாக அவர் ‘மாயவன்’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்து உள்ளார்.
அந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மாயாஜால கிராஃபிக்ஸ் காட்சிகளுடனும், பிரம்மாண்ட செட்டுகளுடனும் கொற்றவை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் படம் குறித்தான எதிர்பார்ப்பும் விண்ணலவு அதிகரித்து உள்ளது.
தெலுங்கு சினிமாவில் பழங்கால புனை கதை படமாக எடுக்கப்பட்ட ‘பாகுபலி’ ஹிட் அடித்தது முதல், தமிழிலும் அதைப் போன்ற தொடர் முயற்சிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து கொற்றவை சினிமாவும் அந்தக் கனவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து உள்ளது.