சினிமா
சொந்த அப்பாவே என்னை ஆபாச நடிகைன்னு கூப்பிட்டாரு.. உர்ஃபி ஜாவேத் வேதனை!

இந்தி டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக உடைகளை அணிந்து கொண்டு பார்ப்பவர்களை பகீர் அடையச் செய்து வருகிறார்.
பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெறும் ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், எப்படியாவது லைம் லைட்டை பிடிக்க வேண்டும் என்றும் மீடியா கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஆபாச உடைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கிளாமரில் பாலிவுட்டையே கதிகலங்க வைத்து வருகிறார்.

Urfi Javed
பல முன்னணி நடிகைகளே தற்போது உர்ஃபி ஜாவேத்துடன் போட்டிப் போடுவதற்காக கன்றாவியான உடைகளை அணிந்து கொண்டு விருது விழா நிகழ்ச்சிகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
டாப்லெஸ் ஆகவே சுற்றித் திரிய ஆரம்பித்து ஏகப்பட்ட புகார்களை வாங்கிப் போட்டுக் கொண்டு சர்ச்சை நாயகியாக வலம் வரும் உர்ஃபி ஜாவேத் இப்படி மாறியதற்கு பின்னாடியும் ஒரு கண்ணீர் கதை இருக்கு என்பதை சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
15 வயதில் இருக்கும் போதே தனது புகைப்படங்களை ஆபாச வலைதளங்களில் யாரோ பதிவு செய்து விட்டனர் என்றும் அதற்காகத் தன்னை பிசிக்கலாவும் மென்டலாவும் தனது தந்தை காயப்படுத்தினார் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் உர்ஃபி ஜாவேத்.

#image_title
மேலும், எங்க அப்பாவே என்னை ஆபாச நடிகை என அழைக்க ஆரம்பித்தார். அந்த தொழில் பண்ணா நிறைய காசு வருமே எங்கே அந்த காசு என்றே பச்சையாக கேட்க ஆரம்பித்தார். 17 வயது வரை வீட்டில் பலமுறை அப்பாவின் அடியை தாங்கிக் கொண்டு வாழ்ந்து வந்தேன். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் அதை சகித்துக் கொள்ள முடியாமல் லக்னோவில் இருந்து வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்தேன்.
இங்கே பிழைப்பதற்காக மாணவர்களுக்கு டியூஷன் எல்லாம் எடுத்து பாடம் சொல்லிக் கொடுத்தேன். பின்னர் தான் இப்படியெல்லாம் டிசைன் டிசைனா டிரெஸ் போட்டு பிரபலம் ஆகலாம், கை நிறைய சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு இந்த ரூட்டுக்கு மாறிவிட்டேன் என பேசி உள்ளது பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.