சினிமா செய்திகள்
புகாருக்கு பின் மீண்டும் டாப்லெஸ் வீடியோ வெளியிட்ட உர்பி ஜாவேத்.. வைரல் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் என்பவர் ஆபாச உடைய அணிந்து வெளியில் சென்றதாக பாஜகவினர் புகார் கொடுத்த நிலையில் தற்போது அவர் மீண்டும் டாப்லெஸ் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு கடுப்பேற்றி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் என்பவர் அரைகுறை உடைகளுடன் எடுத்த ஆபாச புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவாகி கொண்டிருந்த நிலையில் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதுமட்டுமின்றி துபாயில் அவர் கவர்ச்சி உடையில் வீடியோ எடுத்ததால் அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் உர்பி ஜாவேத் அதை மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் ’பதான்’ திரைப்படத்தில் தீபிகா படுகோனே காவி உடையில் ஆபாச உடைய அணிந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் உர்பி ஜாவேத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மகளிர் அணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து விசாரணை செய்ய உர்பி ஜாவேத்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் காவல்துறை முன் ஆஜராகிய தனது விளக்கத்தை அளித்தார்.
நான் ஒரு இந்தியன், நான் விரும்பும் ஆடைகளை அணியை எனக்கு உரிமை உள்ளது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனக்கு அந்த உரிமை வழங்கி உள்ளது என்றும் காவல்துறையினர்களிடம் அவர் தெரிவித்ததாகவ்ம், என் வேலைக்கு ஏற்ப நான் ஆடை அணிகிறேன் என்றும் நான் போட்டோஷூட் நடத்தும்போது சில சமயம் உடைமாற்ற நேரம் இருக்காது என்பதால் அந்த உடையிலேயே வெளியே செல்வேன் என்றும் அப்போதுதான் புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்து வைரல் ஆக்கி உள்ளனர் என்றும் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே ஆபாச புகைப்படம் எடுத்ததாக புகார் அளி க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட டாப்லெஸ் உடை அணிந்து பதிவு செய்துள்ள வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. இதனை அடுத்து பாஜகவினர் தற்போது மீண்டும் கொந்தளித்து உர்பி ஜாவேத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CnbG6RFB03e/