சினிமா
மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்த தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது பல ஆண்டுகால திருமண பந்தத்தில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை அறிவித்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களையே கவலையில் ஆழ்த்தினர்.

#image_title
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்கள் இருவருமே அம்மாவுடன் இருந்து வந்தாலும், தொடர்ந்து அப்பா தனுஷ் உடனும் பல விழாக்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக தனுஷ் கட்டிய வீட்டின் கிரகபிரவேசத்திற்கு அவரது மகன்கள் கூட வரவில்லை. இனிமேல், இருவருமே இணைந்து வாழ வாய்ப்பே இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், அதே நேரத்தில் தான் ரஜினிகாந்தின் அண்ணன் குடும்பத்தில் நடைபெற்ற விழாவுக்காக மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்றிருந்தார். அதனால் தான் தனுஷ் வீட்டுக்கு அவர்கள் வரவில்லை என்றும் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இன்னமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவும் திட்டம் வைத்திருப்பதாக இயக்குநர் சுப்பிரமணியம் சிவா தன்னிடம் பேசும் போது கூறியதாக பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

#image_title
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பிரிந்த நிலையில், ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் வைத்து லால் சலாம் படத்தை இயக்கி திருவண்ணாமலையில் இயக்கி வருகிறார்.
கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக வுண்டர்பார் தயாரிப்பில் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில், இதே பயில்வான் ரங்கநாதன் தான் மீனாவும் தனுஷும் திருமணம் செய்துக் கொள்வதாக பேசி பரபரப்பை கிளப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.