தமிழ்நாடு
இன்றிரவே டெல்லி செல்கிறாரா தமிழக ஆளுனர்? என்ன காரணம்?

தமிழக ஆளுநர் நாளை டெல்லி செல்ல உள்ளதாக திட்டமிட்டிருந்த நிலையில் அவர் இன்று இரவே டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் உள்பட 43 பேர் புதிய அமைச்சர்கள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 6 மாநிலங்களின் கவர்னர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து மத்திய அரசு மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் குறிப்பாக மேலும் சில மாநிலங்களி கவர்னர்களை மாற்றப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் நாளை டெல்லி செல்ல இருப்பதாகவும் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் உடன் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் ஆளுநரின் செயலாளர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவே டெல்லி சென்றிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் நாளை டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் இன்றே டெல்லிக்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநரின் பயணத்திட்டம் திடீரென மாறியது ஏன் என்பதற்கான பதில் விரைவில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















