சினிமா
பான் வேர்ல்ட் படமாகும் தங்கலான்; பா. ரஞ்சித்தின் மாஸ்டர் பிளான்!

மகான், பொன்னியின் செல்வன், கோப்ரா என கடந்த ஆண்டு கலக்கிய சியான் விக்ரம் இந்த ஆண்டும் பொன்னியின் செல்வன் 2, துருவ நட்சத்திரம் மற்றும் தங்கலான் என தெறிக்கவிட காத்திருக்கிறார்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படமே இந்தியளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், சியான் விக்ரமை வைத்து அவர் இயக்கி வரும் தங்கலான் படத்தை பான் வேர்ல்ட படமாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசி உள்ளார்.

#image_title
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் படத்தை டப் செய்தாலே பான் இந்தியா படம் என புதிய படங்கள் வெளியாகி வரும் நிலையில், உலகளவில் எத்தனை மொழிகளில் இந்த படத்தை டப் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டப் செய்து படத்தை உலகில் அனைத்து மக்களும் பார்க்கும் அளவுக்கு படத்தை கொண்டு செல்ல போவதாக ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
சூர்யாவின் சூர்யா 42, சியான் விக்ரமின் தங்கலான் என அடுத்தடுத்து பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் ஓவர்சீஸ் மார்க்கெட்டை பிடிக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மாஸ் பிளான் போட்டுள்ளது.

#image_title
இயக்குநர் பா. ரஞ்சித் அதற்கு தீனி போடும் அளவுக்கு ஒரு அற்புதமான கதையை படமாக இயக்கி வருகிறார் என்றும் கூறியுள்ளார் ஞானவேல் ராஜா. இந்த படத்தில் சியான் விக்ரம் உடன் இணைந்து மலையாள நடிகைகளான பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் பசுபதி மிரட்ட உள்ளார்.