சினிமா
அசோக் செல்வன், சாந்தனுவா இது? உத்து பார்த்தாலும் தெரியலையேப்பா.. ப்ளூ ஸ்டார் ஆந்தம் வேறமாறி!

இயக்குநர். பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்கியராஜ், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் அட்டகாசமான ஆந்தம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் இடம்பெற்ற இமைகள் படத்தில் நடித்த அதே அசோக் செல்வனா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஆளே மாறி உள்ளார்.

#image_title
அரோக்கணத்தில் இருந்த ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் டீமை பற்றிய கதையாக இந்த படம் உருவாகி உள்ளது என்பதை ஆந்தம் பாடலின் காட்சிகளே உணர்த்துகின்றன. ரஞ்சித்தாகவே அசோக் செல்வன் நடித்துள்ளார்.
அசோக் செல்வனை போல ராஜேஷ் ஆக நடித்துள்ள சாந்தனுவும் வித்தியாசமான தோற்றத்தில் வெறித்தனமாக நடித்துள்ளார்.
சென்னை 28 படத்தை போல இதுவும் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை மையமாக கொண்ட கதையாக உருவாகி உள்ளது. பா. ரஞ்சித் படம் என்பதால் சாதிய பிரச்சனைகளும் நிறைந்திருக்கும் என்பதை பார்த்தாலே புரிகிறது.
கோவிந்த் வசந்தா இசையில் தெருக்குரல் அறிவு வரிகளில் உருவாகி உள்ள ஆந்தம் பாடல் ஏகப்பட்ட 90ஸ் கிட்ஸின் கிரிக்கெட் விளையாட்டை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அதிலும், அந்த ஒத்தக் காலில் பேடு கட்டிக் கொண்டு ஆடும் காட்சியெல்லாம் வேறலெவல்.