சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அந்த தேதியிலா?

பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்திய சியான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சொட்டை தலை, காட்டு உடம்புடன் கேஜிஎஃப் பின்னணியை கொண்ட தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு கடந்த 3 வாரங்களாக நிறுத்தப்பட்டு சியான் விக்ரமுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

#image_title
இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து பல ஆண்டுகளாக தூசி படிந்துக் கிடக்கும் அந்த துருவ நட்சத்திரம் படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து விரைவில் ரிலீஸ் ஆகப் போவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
வரும் ஜூலை மாதம் 14ம் தேதி சியான் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

#image_title
அதே நாளில் ரிலீஸ் தேதியை வைத்துள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்துக்கு இதன்மூலமாக சிக்கல் ஏற்படுமா? என்றும் இல்லையென்றால் மாவீரனால் துருவ நட்சத்திரத்துக்கு வசூல் பாதிப்பு ஏற்படுமா? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.