சினிமா
அகநக அகநக முகநகையே! வெளியானது பொன்னியின் செல்வன் 2 பாடல்!

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
கடந்த ஆண்டு வெளியான முதல் பாகம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியது. அதிகபட்சமாக 500 கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் ஈட்டியதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்தது.

#image_title
இந்நிலையில், இரண்டாம் பாகத்தை வெளியிட உள்ள நிலையில், அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை இந்த மாதமே ஆரம்பித்து விட்டது லைகா நிறுவனம்.
ஏகே 62 படத்தின் அப்டேட்களை ஒதுக்கி வைத்து விட்டு பொன்னியின் செல்வன் 2ம் பாகத்துக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது.

#image_title
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சக்திஸ்ரீ கோபாலன் குரலில் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவாகி உள்ள அகநக அகநக முகநகையே பாடல் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மானின் சிறப்பான இசையை ரசிகர்கள் கேட்டு அகமகிழ வைத்துள்ளது.
சிம்புவின் பத்து தல பாடல்கள் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என புலம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிரடியாக பொன்னியின் செல்வன் 2 முதல் பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டு ஏ.ஆர். ரஹ்மான் தன்னை மீண்டும் நிலைநாட்டி உள்ளார்.

#image_title
முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் ரசிகர்களை கவரும் என தெரிகிறது. விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
குந்தவை த்ரிஷா மற்றும் வந்தியத்தேவன் கார்த்தி இருவரின் காதல் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில் த்ரிஷா குதிரை ஏற்றம் எல்லாம் செய்வார் என தெரிகிறது. இதுவரை ஹைப்பே இல்லாமல் இருந்த பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ஹைப்பை இந்த பாடல் அருமையாக ஆரம்பித்து வைத்திருக்கிறது.