சினிமா
மனைவியுடன் ஜாலி டூர் கிளம்பிய அஜித்! அப்போ ஏகே 62 அப்டேட் அவ்ளோ தானா?

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி உடன் இன்ப சுற்றுலா சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் வெளிநாட்டு சுற்றுலாக்களை முடித்து சென்னை திரும்பியதும் ஏகே 62 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் முதலில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம் என அஜித் திட்டமிட்டு இருப்பது இந்த போட்டோக்களை பார்த்தாலே தெரிய வருகிறது.
இயக்குநர் மகிழ் திருமேனிக்கு இன்னமும் கூடுதல் நேரத்தை ஒதுக்கி முழு ஸ்க்ரிப்ட்டையும் செதுக்க சொல்லி விட்டு ஜாலி டூர் அடிக்க கிளம்பி விட்டார் அஜித் எனக் கூறுகின்றனர்.

#image_title
நடிகர் அஜித் இதுவரை தனியாகவும் தனது டீம் உடனும் தான் பைக் டூர் அடித்து வந்த நிலையில், தற்போது மனைவி ஷாலினி உடன் இணைந்து சொகுசு படகில் சுற்றுலா செய்யும் செம ரொமாண்ட்டிக்கான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.
துணிவு படம் உருவாகி வந்த சமயத்தில் கூட மஞ்சு வாரியர் உடன் தான் பைக் டூர் சென்று இருந்தார் நடிகர் அஜித். தனியாகவும் மஞ்சு வாரியர் உடன் பேசும் புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், ஷாலினி அஜித் உடன் தனது அற்புதமான நேரத்தை செலவிட்டு வருகிறார் அஜித்.

#image_title
இப்படி உங்களை ஹேப்பியா பார்ப்பதே எங்களுக்கும் போதும் தல ஏகே 62 வரும் போது வரட்டும் என ரசிகர்கள் அஜித்தின் லேட்டஸ்ட் ஜாலி டூர் போட்டோக்களை பார்த்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.