சினிமா
ரஜினிக்கு வில்லனாக சியான் விக்ரமுக்கு இத்தனை கோடி சம்பளமா?

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்திய சியான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். துருவ நட்சத்திரம் படத்தையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ள நிலையில், விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் அந்நியன், ஐ படங்களில் நடித்த சியான் விக்ரம் ரஜினியின் 2.0 படத்திலேயே வில்லனாக நடிக்க முடியாது என அந்த வாய்ப்பை தட்டிக் கழித்தார் என அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.

#image_title
இந்நிலையில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படத்தில் வில்லனாக நடிக்க சியான் விக்ரமிடம் ஜெய்பீம் பட இயக்குநர் வீட்டிற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பெரும் தொகையை சம்பளமாக தர லைகா நிறுவனம் சொல்லி உள்ள நிலையில், தலையை ஆட்டலாமா? வேண்டாமா? என்கிற யோசனையில் சியான் விக்ரம் உள்ளதாக கூறுகின்றனர்.
முன்னணி நடிகர்கள் படங்களில் இன்னொரு ஹீரோவை வில்லனாக போடும் வழக்கம் ஆரம்பித்துள்ள நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க சியான் விக்ரமை அணுகி உள்ளனர். லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களில் நடித்துள்ள சியான் விக்ரமுக்கு வில்லனாக நடிக்க 50 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
ஏற்கனவே கமலுக்கு வில்லனாக ரோலக்ஸ் ஆக நடிக்க முடியாதென சொன்ன நிலையில், அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்க 50 கோடி ரூபாய் சம்பளத்திற்கு சியான் விக்ரம் சம்மதிப்பாரா? மாட்டாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.