சினிமா
தங்கச்சி குந்தவையுடன் பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்த ஆதித்த கரிகாலன்!

பொன்னியின் செல்வன் 2 நேற்று வெளியான நிலையில், திரையிட்ட இடங்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களுக்கு எல்லாம் நள்ளிரவு, அதிகாலை காட்சிகள் வழங்கப்பட்ட நிலையில், ரெட் ஜெயண்ட்டுக்கு படத்தை ரிலீஸ் செய்ய கொடுத்தும் பொன்னியின் செல்வன் படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை.
ஆனால், மற்ற அனைத்து படங்களையும் தூக்கிவிட்டு ஏகப்பட்ட ஷோக்களை பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு பல திரையரங்குகள் போட்டுள்ளன.

#image_title
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூப்பராக இருக்கிறது என்கிற பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்தை வேறலெவலில் வெற்றியடைய வைக்கும் மந்திரச் சொல்லாக மாறி உள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தை முதல் நாள் முதல் காட்சியை வடபழனியில் உள்ள பலாஸோ திரையரங்கில் சியான் விக்ரம், த்ரிஷா, ஜெயராம், ஜெயசித்ரா, ஷோபிதா துலிபாலா மற்றும் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் கண்டு ரசித்த புகைப்படத்தை லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் நடிகர்கள் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையும் தியேட்டர் விசிட்டும் அடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமை என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படத்தின் வசூல் 500 கோடியை அசால்ட்டாக தாண்டும் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.