சினிமா செய்திகள்
தல அஜித்தின் ‘வலிமை’ வீடியோ!

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் அந்த வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்கு பைக்கில் அஜித் தாவும் காட்சி, நான் கேம் ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என்ற அஜித்தின் வசனம்,கார்த்திகேயா வீராவேசமாக வசனம், பைக் சேஸிங் காட்சிகள் ஆகியவை இந்த கிளிம்ப்ஸ் வீடியோவின் ஹைலைட்ஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படத்தில் வரும் காட்சியைப் போல ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு அஜித் பைக்கில் தாவும் காட்சியை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் இந்த படம் அஜித்துக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோ ரசிகர்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே வலிமை திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்தாலும் அக்டோபர் மற்றும் நவம்பர் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.