சினிமா
5 மாசம் தான் டைம்.. அசுர வேகத்தில் நடக்கப்போகும் விடாமுயற்சி ஷூட்டிங்.. ஏன் தெரியுமா?

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெறும் 5 மாதங்களுக்குள் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லைகா தயாரிப்பில் உருவாக உள்ள அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் மே மாதம் 3வது வாரத்தில் தொடங்கும் என்றும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறுகின்றனர்.

#image_title
அவ்வளவு ஸ்பீடாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடக்க காரணமே அஜித்தின் வேர்ல்ட் டூர் தானாம்.
இந்தியா முழுவதும் கிடைக்கிற கேப்பில் பைக்கை ஓட்டி முடித்த நடிகர் அஜித் குமார் தற்போது பூட்டான் மற்றும் நேபாளத்தில் தனது பைக் ரைடை முடித்து விட்டாராம். தற்போது இந்த அறிவிப்பை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகம் முழுவதும் மற்ற நாடுகளுக்கு பைக்கில் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருக்கிறார் அஜித் என்கிற ஹாட்டான அப்டேட்டையும் கொடுத்து விட்டார் சுரேஷ் சந்திரா.
இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அக்டோபர் மாதத்துக்குள் பக்காவாக திட்டமிட்டு முடிக்கப் போவதாகவும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுற்றுலாவை முழுமையாக முடித்து விட்டுத் தான் நடிகர் அஜித் தனது அடுத்த படத்திலேயே கமிட் ஆவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.