சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களுக்கு நற்செய்தி: AK62 பற்றிய முக்கிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான துணிவு படம் மெகா வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் இவரது அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, கதை பிடிக்காததால் அவரை கழட்டி விட்டது லைகா நிறுவனம்.
AK62
AK62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னமும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. அஜித் குமாரின் 62 வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
அஜித் பிறந்தநாள்
இந்த நிலையில் மே 1 ஆம் தேதி அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு AK62 படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என தமிழ் சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. மேலும் AK62 படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குவதாக கூறப்பட்டது. ஆனால், அஜித் குமார் நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதன் காரணமாக வருகின்ற ஜூன் மாதம் AK62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.
அஜித் படம் பற்றிய அப்டேட்டை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இருப்பினும், மே 1 அன்று தான் எந்தவித அப்டேட்டும் தெரிய வரும் என்பதால், அதுவரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.