சினிமா
அஜித்தின் ‘விடாமுயற்சி’ விஸ்வரூப வெற்றி அடையுமா? பிறந்தநாள் பரிசு வேறலெவல்!

நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு எந்தவொரு அப்டேட்டும் இல்லையா என கடைசி வரை அமைதி காத்த லைகாவை ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும், கப்சிப் என இருந்த லைகா நிறுவனம் திடீரென நள்ளிரவில் அஜித்தின் பிறந்தநாள் பரிசாக ஏகே 62 டைட்டிலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே கசிந்த அதே ‘விடாமுயற்சி’ என்கிற டைட்டிலைத்தான் அஜித்தின் 62வது படத்திற்கு இயக்குநர் மகிழ் திருமேனி தேர்வு செய்துள்ளார் என்பது வெளியாகி விட்டது.

#image_title
விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து விரட்டப்பட்ட நிலையில், லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்கிற தகவல் வெளியானாலும், இன்று தான் முறைப்படி லைகா நிறுவனம் அதனை அறிவித்துள்ளது.

#image_title
அனிருத் இசையில் உருவாக உள்ள இந்தப் படத்தில் யாரு ஹீரோயின், யாரு வில்லன் என்கிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் தான் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்கின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலை டார்கெட் செய்து விடாமுயற்சி வரப்போகுதா? அல்லது இந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீஸ் ஆகுமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
52வது பிறந்தநாளை கொண்டாடும் தல அஜித்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அஜித் ரசிகர்கள் ‘விடாமுயற்சி’ உடன் இந்த டைட்டில் லுக்கை ரெக்கார்டு பிரேக் பண்ணவும் வாழ்த்துக்கள்!