சினிமா
கடைசி வரைக்கும் மெளனம் காக்கும் லைகா.. தொடரும் PS2 ப்ரமோஷனால் கடுப்பாகும் அஜித் ரசிகர்கள்!

மே 1ம் தேதி உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிற அறிவிப்பு மட்டும் தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
அஜித் பிறந்தநாள் மே1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுவரை ஒரு அப்டேட் குறித்த அறிகுறி கூட லைகாவிடம் இருந்து வெளியாகவில்லை.
பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு தீவிரமாக ப்ரமோஷன் செய்வதில் குறியாக லைகா நிறுவனம் இருக்கும் நிலையில், ஏகே 62 பற்றிய அக்கறையை லைகா நிறுவனமும் காட்டப் போவதில்லை என்றே தெரிகிறது.

#image_title
நள்ளிரவு 12 மணிக்கு ஏகே 62 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என ரசிகர்களே கிளப்பி விட்ட தகவல்கள் தான் தீயாக பரவி வருகிறது.
மேலும், விடாமுயற்சி தான் படத்தின் டைட்டில் என்றும் சோஷியல் மீடியாவில் ஏகே 62 டைட்டில் இதுதான் என வைரலாகி வருகிறது.
ஆனால், தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் வசூல், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ரசிகர்கள் செய்யும் மக்கள் விமர்சனம் உள்ளிட்ட பல ப்ரமோஷன் போஸ்ட்டுகள் வெளியாகி வர அஜித் ரசிகர்கள் கண்டமேனிக்கு அசிங்கமான கமெண்ட்டுகளை போட்டு அஜித்துக்கு 100 கோடி சம்பளம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனத்தையே கேவலமாக திட்டி வருகின்றனர்.
நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்காக நிச்சயம் நாளை ஏதாவது சர்ப்ரைஸ் வைத்திருப்பார் என்றேர் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பிரேம்ஜி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிகர் அஜித்தின் சிடிபியை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.