சினிமா
ஒரு மணி நேரத்தில் மாஸ் ரெக்கார்ட்!.. யுடியூப்பில் மாஸ் காட்டும் வலிமை Glimpse வீடியோ…

அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘வலிமை’திரைப்படத்தின் Glimpse வீடியோ இன்று மாலை வெளியானது.
ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்கு பைக்கில் அஜித் தாவும் காட்சி, நான் கேம் ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என்ற அஜித்தின் வசனம்,கார்த்திகேயா வீராவேசமாக வசனம், பைக் சேஸிங் காட்சிகள் ஆகியவை இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ஹைலைட்ஸ் ஆக உள்ளது.
குறிப்பாக ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படத்தில் வரும் காட்சியைப் போல ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு அஜித் பைக்கில் தாவும் காட்சியை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் இந்த படம் அஜித்துக்கு முற்றிலும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோ ரசிகர்களுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே வலிமை திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டிருந்தாலும் அக்டோபர் மற்றும் நவம்பர் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வலிமை படத்தில் Glimpse வீடியோ யுடியூப்பில் வெளியாக 2 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.