சினிமா செய்திகள்
பைக் ரைடு, ரைபிள் பயிற்சி முடித்துவிட்டு சைக்கிள் ரைடு கிளம்பிவிட்டார் ‘தல’ அஜித்..!

தல அஜித் தனது அடுத்த சாகசப் பயணமாக தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மிக நீண்ட சைக்கிள் பயணத்துக்குச் சென்றுள்ளார்.
தல அஜித் தற்போது வலிமை பட படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு வெளியீட்டுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து 10 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு வாரணாசி வரையில் மிக நீண்ட பைக் ரைடு செய்து வைரல் ஆனார். அதன் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பின்னர் 2021-ம் ஆண்டுக்கான துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.
இதற்காக சென்னை ரைபிள் க்ளப் வளாகத்தில் அஜித் பயிற்சி மேற்கொண்டார். அதை முடித்துவிட்டு தற்போது அடுத்த சாகசப் பயணமாக சைக்கிளை எடுத்துக் கொண்டு ரைடு சென்றுள்ளார் அஜித். ஆந்திரா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதிகளில் அதிகாலை சைக்கிள் பயணத்தின் போது தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
வலிமை படத்தைப் பொறுத்தவரையில் முடிந்தளவு மே மாதம் தல பிறந்தநாளின் போது படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

















