சினிமா செய்திகள்
பெண் விஞ்ஞானிகளை போற்றும் மிஷன் மங்கள்!

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் மங்கள் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பிரபாஸின் சாஹோ படத்துக்கு போட்டியாக வெளிவருகிறது.
இந்த படத்தில் அக்ஷய் குமாருடன் இந்திய திரையுலகின் நான்கு முக்கிய கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட மிஷன் மங்கள் வெற்றிகரமாக செல்ல உதவிய பெண் விஞ்ஞானிகள் குறித்த படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வித்யா பாலன், டாப்ஸி, சோனாக்ஷி சின்ஹா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் அக்ஷய் குமார், வீட்டை அழகாக்குவதாக இருந்தாலும், விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பவதாக இருந்தாலும், பெண்களின் பங்கு அளப்பரியது என்று கூறி, பெண்மையை போற்றுவோம் எனக் கூறியுள்ளார்.
விரைவில் இந்திய விஞ்ஞானிகளின் சாகசங்களை ஒரு பயோபிக் படமாக பார்க்க போகும் பாக்கியம் ரசிகர்களுக்கு கிடைக்கப்போகிறது.





















