சினிமா செய்திகள்
கியருக்கு பதில் அந்த இடத்தை தொட்ட டாப்ஸி; கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்?

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் மங்கள் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின வெளியீடாக வெளி வருகிறது.
செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப இந்திய விண்வெளி துறையில் பணியாற்றிய பெண்கள் செய்த சாகசத்தை மையமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில், டாப்ஸி, வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து வெளியான முதல் டிரைலர் பலரையும் பாராட்ட வைத்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட புதிய டிரைலர் படத்திற்கு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காமெடி காட்சி என்ற கோணத்தில் இடம்பெறும் டாப்ஸியின் காட்சி ஒன்றில், கார் ஓட்டும் போது, கியருக்கு பதில், அருகில் கார் ஓட்ட கற்றுத் தரும் ஆணின் அந்தரங்க இடத்தை டாப்ஸி பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது தான் அந்த சர்ச்சைக்கு காரணம்.
கபீர் சிங் படத்தின் டிரைலர் வந்தபோது, நாயகியை நாயகன் தாக்கும் காட்சியை குறிப்பிட்டு, எதிர்ப்பு குரல் கொடுத்த டாப்ஸி, இப்படி ஆணின் அந்தரங்க இடத்தை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்கலாமா என நெட்டிசன்கள் ஸ்க்ரீன் ஷாட்கள் எடுத்து மீம்ஸ்களை குவித்து கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.
இந்த காட்சி படத்திற்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியை கொடுக்கும் என தெரிந்தே படக்குழுவினர் டிரைலரில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















