ஆரோக்கியம்
வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025: ஆரம்பக் அறிகுறிகள் மற்றும் கவனிக்க வேண்டியவை!

வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025
மனிதர்களை தாக்கும் நோய்களில் மிகவும் கொடியது புற்றுநோய்தான். அதில் வயிற்றில் உருவாகும் புற்றுநோய், வயிற்றில் உள்ள செல்களில் அசாதாரண கட்டி உருவாகுவதால் ஏற்படும். வயிற்றுப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வயிற்றுப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது.
வயிற்றுப் புற்றுநோய் அறிகுறிகள்:
தொடர் வயிற்றுவலி: திடீரென்று காரணமின்றி வயிற்று வலி.
மலத்தில் மாற்றங்கள்: இரத்தக்கசிவு, மலச்சிக்கல், மலத்தில் மாற்றங்கள்.
எடை இழப்பு: காரணமில்லாத உடல் எடை குறைவு.
பசியின்மை: பசி வராதது, வயிறு நிரம்பியிருப்பது போல் உணர்வு.
வயிற்று வீக்கம் மற்றும் மலச்சிக்கல்: வயிற்று வீக்கம், அடிக்கடி மலச்சிக்கல்.
தொடர் நெஞ்செரிச்சல்: பல வாரங்களுக்கு தொடர்ச்சியான நெஞ்சு எரிச்சல்.
விழுங்குவதில் சிரமம்: உணவுகளை விழுங்குவதில் சிரமம், திரவ உணவு அல்லது திட உணவு ஏற்க முடியாமை.
இந்த அறிகுறிகளை சந்தித்தால் மருத்துவரை உடனே அணுகி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். ஆரம்ப காலத்தில் கண்டுபிடித்தால் சிகிச்சை சாத்தியமாகும் மற்றும் கொடுமையான விளைவுகளைத் தவிர்க்க முடியும்.



















