ஆரோக்கியம்
கேரளா ஸ்டைல் சிக்கன் புளிக்கறி செய்முறை: வீட்டில் சுவையான சிக்கன் கிரேவி!

இந்த வாரம் வீட்டில் சிக்கன் சமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளீர்களா? இட்லி, தோசை அல்லது சாதத்துடன் சுவை சேர்க்க கேரளா ஸ்டைல் சிக்கன் புளிக்கறி செய்வது சிறந்த தேர்வாகும். இது காரமும், புளிப்பும் கொண்ட கிரேவி, சுவை அற்புதமாக இருக்கும். குளிர் காலங்களில் சளி பிடித்திருந்தால் இதை சாப்பிடுவது சிறிது நிவாரணம் தரும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – ½ கிலோ
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – ½ டீஸ்பூன்
சீரக தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
புளிக்கரைசல் – ¼ கப்
கறிவேப்பிலை – 12 கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு பல் – 5
கசகசா – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவிய – 2 ஸ்பூன்
செய்முறை:
வறுத்து அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
சிக்கன் சேர்த்து 5 நிமிடம் கிளறி வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
10–12 நிமிடம் மூடி வைத்து வேக விடவும், இடையிடையே கிளறவும்.
சிக்கன் வெந்து புளி நீர் சேர்க்கவும்.
வறுத்து அரைத்த மசாலா சேர்த்து 10–15 நிமிடம் கிரேவி கெட்டியாக வரும் வரை சமைக்கவும்.
இறுதியில் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து கொத்தமல்லி தூவி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
இதன் மூலம் சுவை மிகுந்த, காரசாரமான கேரளா ஸ்டைல் சிக்கன் புளிக்கறி ரெடி!















