Connect with us

சினிமா செய்திகள்

சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படத்தில் சர்ச்சை நடிகை: வீடியோ வைரல்!

Published

on

பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்ட பல தமிழ் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் தெலுங்கு சினிமா நடிகர்கள் சங்கத்தின் முன் திடீரென அரை நிர்வாணமாக உட்கார்ந்து தனக்கு நீதி வேண்டும் என போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி, ராகவாலாரன்ஸ் இயக்கும் படம் உள்பட ஒருசில படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரது எந்த படமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக கடந்த 1980களில், 1990களில் புகழ்பெற்ற நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்றில் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் சில்க் ஸ்மிதா கேரக்டரில் தான் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் முழு விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏற்கனவே தமிழ் உள்பட பல மொழிகளில் வெளிவந்து வெற்றிபெற்ற நிலையில் மீண்டும் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized1 நாள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
Guest post privacy notice.