தமிழ்நாடு
பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா?

பழம்பெரும் நடிகையின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் தயாராகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’தலைவி’ சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தி டர்ட்டி பிக்சர்ஸ்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’நடிகையர் திலகம்’ ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உள்ளிட்ட பல நடிகைகளின் படங்கள் திரைப்படமாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் சிவாஜி உட்பட பல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஜமுனா என்பதும் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், மருத நாட்டு வீரன் உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜமுனாவின் கேரக்டரில் நடிக்க நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





















