சினிமா
பழைய கெட்டப்புக்கு மாறிய சிம்பு! கெட்டவன் ஆட்டம் ஆரம்பமா என கேட்கும் ரசிகர்கள்?

நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்று உடல் பயிற்சி செய்து தனது உடம்பை பழைய படி மீண்டும் ஸ்லிம் ஆக்கி விட்டார் சிம்பு.
ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு செம ஸ்லிம்மாக தனது உடம்பை மாற்றி இருந்தார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் கிளைமேக்ஸ் மற்றும் பத்து தல படத்தில் ஏஜிஆராக நடிக்க தனது பாடியை மீண்டும் பருமனாக மாற்றி நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.

#image_title
பழையபடி சிம்பு உடல் எடையை குறைப்பாரா? என கவலைப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக ஆளே மாறிப்போன சிம்புவாக மார்ஷியல் ஆர்ட்ஸ் மூலமாக ஒட்டுமொத்த உடல் எடையையும் குறைத்து காளை, கெட்டவன் பட சிம்பு போல மாறி காட்சியளித்துள்ளார்.
பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு இதுவரை எந்தவொரு படத்திலும் கமிட் ஆகாத நிலையில், கெட்டவன் படத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறாரா சிம்பு என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

#image_title
சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் ஒபெலி. என். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், சிம்பு என்ன பேசப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.