சினிமா
அனுமதி இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தால் சுட்டுடுவேன்; கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் வெல்கம் போர்ட் அல்லது நல்வரவு என்று தான் மாட்டி வைப்பார்கள். ஆனால், எல்லாத்தையும் வித்தியாசமாக செய்து சர்ச்சைகளின் ராணியாக மாறி உள்ள நடிகை கங்கனா ரனாவத் தனது புதிய வீட்டிற்கு முன்பாக அனுமதியின்றி வீட்டுக்குள் வந்தால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என போர்ட் வைத்திருப்பது பலரையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகையாக வளர்ந்தார். ஜெயலலிதாவின் பயோபிக் படத்தில் தலைவியாக என்ட்ரி கொடுத்த கங்கனா ரனாவத்துக்கு அந்த படம் பெரிதாக கை கொடுக்கவில்லை.

#image_title
ஆனாலும், கோலிவுட் கங்கனா ரனாவத்தை விடுவதாக தெரியவில்லை. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் தான் சந்திரமுகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் தனது போர்ஷனை முழுமையாக முடித்த கங்கனா ரனவத் கண்ணீருடன் விடைபெறுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், புதிதாக அவர் கட்டி வரும் வீட்டில் இப்படியொரு மோசமான அறிவிப்பு பலகை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா உனக்கு இவ்வளவு திமிர் என விளாசி வருகின்றனர். சுட்டதும் உயிர் பிழைத்தவர்களை மறுபடியும் சுட்டுக் கொல்வேன் என கங்கனா ரனாவத் குறிப்பிட்டதை பார்த்த பலரும் ஹிட்லருடன் கங்கனா ரனாவத்தை ஒப்பிட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

#image_title
அந்த ஏரியா போலீசார் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கங்கனா ரனாவத் இப்படி கொலை மிரட்டல் விடுப்பது குற்றம் என்றும் யாரையாவது சுட்டு விட்டு அவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்றும் சொல்வார் போல என வெளுத்து வாங்கி வருகின்றனர்.