சினிமா செய்திகள்
சூர்யா-கார்த்தி இணையும் திரைப்படத்தில் ஷங்கர் மகள் அறிமுகம்!

சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா தயரிப்பில் கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ என்ற திரைப்படம் ஏற்கனவே வெளியாகி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது.
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்ததோடு, புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிதிஷங்கர் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்க இருப்பதாக இந்த படத்தின் போஸ்டரில் இருந்து தெரியவருகிறது. முத்தையாவின் வழக்கமான அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய இந்த படத்தின் படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பில் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது இரண்டாவது மகள் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.




















