Connect with us

சினிமா செய்திகள்

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’!

Published

on

சசிகுமார் நடித்த ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராகிய நிலையில் தற்போது தான் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சசிகுமார், சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’எம்ஜிஆர் மகன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளியன்று அதாவது நவம்பர் 4-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என ஹாட்ஸ்டார் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நவம்பர் 2ஆம் தேதி அமேசானில் சூர்யாவின் ஜெய்பீம் ரிலீஸாக உள்ள நிலையில் மற்றொரு முன்னணி நடிகரின் திரைப்படமும் ஓடிடியில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீபாவளிக்கு திரை அரங்குகளில் ரஜினியின் அண்ணாத்த மற்றும் விஷாலின் எனிமி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டி இருந்த மாநாடு திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

ஸ்கிரீன்சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மிருணாளினி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் பாடகர் அந்தோணிதாசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்16 மணி நேரங்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்1 நாள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா1 நாள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized2 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்2 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்5 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்5 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்5 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

Translate »
Long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612. True to live action sonic design. 恋?.