சினிமா செய்திகள்
என் மூஞ்சி டிவியில் வர நான் என்ன வேணும்னாலும் செய்வேன்: அபிஷேக்

என் மூஞ்சி டிவியில் வர நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என தரை லோக்கலுக்கு இறங்கி அபிஷேக் பேசியிருப்பது பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ஆரம்பம் முதலே தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார் என்பதும் வேண்டுமென்றே மற்றவர்களுடன் வம்புக்கு இழுப்பதும், ஆலோசனை சொல்வதும், அறிவுரை செய்வதுமாக இருக்கின்றார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அவருடைய நடவடிக்கைகள் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய புரமோவில் அபிஷேக், ‘பிரியங்காவுடன் இருந்தால் தான் என்னுடைய மூஞ்சி டிவியில் தெரியும் என்றால் அதையும் செய்வேன் என்றும், இமான் அண்ணாச்சி உடன் சண்டை போட்டால் தான் என்னுடைய மூஞ்சி தெரியும் என்றால் அதையும் செய்வேன் என்றும் வெட்கமே இல்லாமல் பலரது முன்னிலையில் கூறினார்
இதனை அடுத்து இமான் அண்ணாச்சி ’இது ரொம்ப கேவலமாக இல்லையா’ என்று கேட்க அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் அபிஷேக் பேசியிருப்பது சக போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
அதுமட்டுமின்றி உன்னிடமிருந்து அக்ஷராவை பிரிக்க எனக்கு இரண்டு நிமிடம்கூட ஆகாது என்று ராஜூவுடன் சவால் விடவும் செய்கிறார் அபிஷேக். இப்படியே போனால் அபிஷேக் இன்னொரு ஜூலி ஆகிவிடுவாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
#Day17 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/N2qEMJPsTo
— Vijay Television (@vijaytelevision) October 20, 2021


















