சினிமா
பவன் கல்யாணுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்; செல்லம்மாவுக்கு செம ஜாக்பாட் தான்!

ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.
தனுஷை தொடர்ந்து கவினுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், என் ரேஞ்சே வேற என டோலிவுட்டில் முன்னணி நடிகர் படத்தையே புக் செய்து விட்டார் பிரியங்கா மோகன். கன்னடத்தில் அறிமுகமான பிரியங்கா மோகன் தெலுங்கில் நானியின் கேங் லீடர் படத்தில் நடித்தார். நெல்சன் அவரை தமிழுக்கு டாக்டர் படத்தின் மூலம் கொண்டு வந்தார்.

#image_title
டாக்டர் படத்தில் பிரியங்கா மோகனின் அழகை பார்த்து அசந்து போன்ற இயக்குநர் பாண்டிராஜ் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஹீரோயினாக பிரியங்கா மோகனை மாற்றினார். அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் சிபி சக்கரவர்த்தி இயக்கிய டான் படத்திலும் பிரியங்கா மோகன் செம க்யூட்டாக நடித்திருந்தார்.
கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாக உள்ள பவன் கல்யாணின் ஓஜி என அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

#image_title
இந்த படத்துக்காக பிரியங்கா மோகனுக்கு கிட்டத்தட்ட அதிகபட்சமாக 2 கோடி வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கன்னடம், தமிழ், தெலுங்கு என கலக்கி வரும் பிரியங்கா மோகனும் கூடிய சீக்கிரமே பாலிவுட்டுக்கு பறந்து விடுவாரோ என்கிற சந்தேகம் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடை திறப்பு விழாவுக்கு பிரியங்கா மோகன் சென்றால் கூட ஆயிரக் கணக்கில் ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர்.