சினிமா
பலான தொழில் செய்து வந்த மாதவன் பட நடிகை; போலீஸாரிடம் வசமாக சிக்கியது எப்படி?

இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த மாதவன் பட நடிகை ஆர்த்தி மிட்டலை காவல் துறையினர் கையும் களவுமாக கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் மாதவன் உடன் இந்தி படம் ஒன்றில் நடித்துள்ள ஆர்த்தி மிட்டல் இப்படியொரு கேடு கெட்ட வேலையை செய்தது அம்பலமாகி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

#image_title
மாடலிங் துறையில் ஈடுபட்டு வரும் இளம் நடிகைகளிடம் சினிமா சான்ஸ் வாங்கி தருவதாக ஆசைக்காட்டி பலான தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரை தீவிரமாக கண்காணித்த போலீசார் ஆர்த்தி மிட்டலை வலை விரித்து மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து போலீசார் மீடியாவிற்கு அளித்துள்ள பேட்டியில், நடிகை ஆர்த்தி மிட்டல் சினிமாவில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பல பெண்களை மயக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இதற்காக ஓஷிவாராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சில இடங்களில் பாலியல் தொழில் செய்துள்ளார். இதுகுறித்து புகார் வந்ததும் அவரை ஆதாரத்துடன் பிடிக்க திட்டமிட்டு, வாடிக்கையாளர் போல நடித்து, ஆர்த்தியை தொடர்பு கொண்டு எங்களுக்கு இரண்டு பெண் வேண்டும் என்று கேட்டோம்.

#image_title
இதையடுத்து, ஆர்த்தி இரண்டு பெண்களின் புகைப்படத்தை அனுப்பிவைத்தார். ஓகே என்றால், 60 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என்றும் பணத்தை கோரேகானில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பெற்றுக்கொள்வதாக கூறியதை அடுத்து, அந்த ஓட்டலில் போலீஸ் அதிகாரிகள் காத்திருந்து பலான தொழில் செய்த பாலிவுட் நடிகையை கைது செய்தனர்.
இந்த சம்பவம் இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஆர்த்தி மிட்டல் உடன் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரிக்க காவல்துறை முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.