சினிமா
இனிமே பிரியங்கா மோகன் பக்கமே வரக்கூடாது; மனைவி போட்ட உத்தரவு நடிகையை மாற்றும் சிவகார்த்திகேயன்?

பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கப் போகிறேன் என கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கி வந்த இயக்குநர் ராஜ்குமா பெரியசாமி தான் அந்த படத்தை இயக்கப் போவதாக அறிவித்தனர்.
ஆனால், அதற்கு பிறகு பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் சீசன் 6ஏ முடிந்து விட்டன. இன்னமும் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி படத்தை ஆரம்பிக்கவில்லை.

#image_title
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக பல்வேறு தடைகளுடன் நடைபெற்று வருவதே இந்த கால தாமத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்னொரு புதுப் பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளதாக கூறுகின்றனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் சாய் பல்லவி தான் ஹீரோயின் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் படத்தில் தற்போது சாய் பல்லவி நடிக்க மறுத்து விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சாய் பல்லவி கழட்டி விட்ட நிலையில், கைவசம் உள்ள நடிகை பிரியங்கா மோகனையே புக் பண்ணிடலாமா என சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம் அவரது மனைவி காதுக்கு சென்றதாகவும், இனிமேல் பிரியங்கா மோகன் உடன் ஜோடி போட்டு நடிக்காதீங்க என மனைவி சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்டதாகவும் தற்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.

#image_title
டாக்டர் மற்றும் டான் படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தொடர்ந்து பிரியங்கா மோகன் நடித்திருந்தார். பிரின்ஸ் படத்தில் மரியா எனும் வெளிநாட்டு நடிகையும், தற்போது நடித்து வரும் மாவீரன் படத்தில் ஷங்கர் மகள் அதிதி ஷங்கரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் பிரியங்கா மோகன் என்றால் வேண்டவே வேண்டாம் என சிவகார்த்திகேயன் தரப்பு சொன்ன நிலையில், சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூரை அந்த படத்தில் ஜோடியாக்கும் முயற்சியில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்து நடித்து வருவதால் தான் அவரை சிவகார்த்திகேயனே வேண்டாம் எனக் கூறுகிறார் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.