சினிமா
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!

நடிகர் விஜய்யின் அட்மின் ஜகதீஷ் ப்ளிஸ் நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் உடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
எனக்கு ட்வீட்லாம் பண்ணத் தெரியாது அட்மினை கூப்பிடுறேன் என நடிகர் விஜய் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அழைத்த அதே ஜகதீஷ் ப்ளிஸ் உடன் தான் இரண்டு நடிகைகளும் தோளோடு தோள் சேர்த்து எடுத்துக் கொண்ட பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் ரசிகர்களை சற்றே ஷாக் ஆக்கி உள்ளன.
நடிகை கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து நடித்த மாமன்னன் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். சமீபத்தில் தனது அடுத்த படமான ரிவால்வர் ரீட்டா படத்தில் நடிக்க உள்ளதாக டைட்டில் போஸ்டரை வெளியிட்டு அறிவித்து இருந்தார்.
தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா மோகன் திடீரென எப்படி கீர்த்தி சுரேஷ், விஜய் அட்மின் டீமில் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார் என்ன விஷயம் என கோலிவுட்டே இந்த போட்டோக்களை பார்த்து பரபரப்பாகி உள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் ஏதாவது புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார்களா அல்லது நட்பின் பேரில் ஒரே இடத்தில் இப்படியொரு பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தி உள்ளனரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜகதீஷ் ப்ளிஸ் நடத்தி வரும் The Route தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்கு நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர் என்கின்றனர். இருவரும் கூடிய விரைவில் ஜகதீஷ் ப்ளிஸ் தயாரிப்பு நிறுவனத்தில் படங்கள் பண்ணப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.