சினிமா
துரத்தி விட்ட அஜித்.. கடைசியில் கமலுக்கே ஜோடியாக முடிவு பண்ண நயன்தாரா!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடித்தால் ஹீரோயினாக மாறிவிடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த நயன்தாராவின் கனவுக்கு நடிகர் அஜித் விக்னேஷ் சிவனே வேண்டாம் என சொல்லி பெரிய வேட்டு வைத்து விட்டார்.
இந்நிலையில், கோலிவுட்டில் எந்தவொரு முன்னணி நடிகருடனும் ஜோடி போட முடியாமல் வினய்க்கு எல்லாம் ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா தனது முதல் இடத்தை த்ரிஷா தட்டிப் பறிக்க காரணமாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்க சமீபத்தில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழாவிலேயே இயக்குநர் மணிரத்னத்திடம் நேரடியாகவே விண்ணப்பம் போட்டிருந்தார்.

#image_title
மணி சார் கையில விருது வாங்குறது பெருமை என்றாலும், மணி சார் படத்தில் நடித்து ஒரு விருது கிடைத்தால் அது தான் என் கனவு நினைவாகும் தருணம் என பேசி உள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ள நயன்தாரா இதுவரை ஒருமுறை கூட கமலுடன் இணைந்து நடித்ததே இல்லை.

#image_title
இந்நிலையில், ஒரே கல்லுல இரண்டு மாங்காய் என சொல்வது போல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் நயன்தாரா ஹீரோயினாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நயன்தாராவின் கோரிக்கையை ஏற்ற மணிரத்னம் கமலிடம் தனது முடிவை சொல்ல அவரும் டபுள் ஓகே சொல்லி விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.