Connect with us

சினிமா செய்திகள்

லூசிஃபர் வெற்றி… மோகன்லாலை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கும் ப்ரித்விராஜ்

Published

on

மலையாளத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு பட உலகிலும் வெற்றிப் பெற்ற லூசிஃபர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் மோகன்லாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் நடிகர் ப்ரித்விராஜ்.

நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் ஆக அறிமுகம் ஆன திரைப்படம் லூசிஃபர். இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகன் ஆக நடித்திருப்பார். இவர்களுடன் விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். இதைத் தொடர்ந்து மீண்டும் மோகன் லாலை வைத்தே ஒரு படத்தைத் தொடங்கி உள்ளார் ப்ரித்விராஜ்.

‘ப்ரோ டாடி’ என இந்தப் படத்துக்கு தலைப்பு வைத்துள்ளனர். இன்று முதல் ப்ரோ டாடி படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கேரளாவில் கொச்சி நகரிலேயே முழுவதுமாகப் படப்பிடிப்பு நடக்க இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இன்னும் கேரள அரசு படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதனால் படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் ஒரே கட்டமாக 40 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் தியேட்டர் வெளியீடாக மட்டுமே இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முழுவதும் கமர்ஷியல் படமாக உருவாகும் ப்ரோ டாடி படத்துக்காக 25 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளாராம் மோகன்லால். இயக்குநர் ப்ரித்விராஜும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி ஆக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized3 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

Translate »
saint vincent resort & casino. A staple of klangspot recordings. What is a first party data strategy in affiliate marketing ?.