விமர்சனம்
2 மணி நேரம்.. ஒரே ஆள்.. ஒரே லொகேஷன்.. மோகன்லாலின் Alone ட்விட்டர் விமர்சனம்!

நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 படம் எப்படி ஒரே நடிகரை வைத்து படம் முழுக்க நகர்ந்ததோ அதே போன்றதொரு முயற்சியை மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் அலோன் படத்தின் மூலம் செய்து அசத்தி உள்ளார்.
2 மணி நேரம் ஒரே ஆள், அதுவும் ஒரே லொகேஷனில் தனது நடிப்பால் கட்டிப் போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி அசத்தி உள்ளார் மோகன்லால். மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் தேசிய விருது பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

#image_title
கடைசியாக ஓடிடியில் வெளியான மோகன்லாலில் 12த் மேன் உள்ளிட்ட படங்களும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், இன்று மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள அலோன் திரைப்படம் தியேட்டரில் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

#image_title
எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தியேட்டருக்கு சென்று பார்த்தோம். ஆனால், லாலேட்டன் நம்மை எப்போதும் போல ஏமாற்றவில்லை. அவரது தனித்துவமான நடிப்பு கடைசி வரை தியேட்டரில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறது.

#image_title
இயக்குநர் ஷாஜி கைலாஸின் மேஜிக் இந்த முறையும் செம சூப்பராக வொர்க்கவுட் ஆகி உள்ளது. படம் நிச்சயம் ரசிகர்களை என்டர்டெயின் பண்ணும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. தாராளமாக தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய படம் தான். ஓடிடி கன்டென்ட் என ஒதுக்கி விடாதீர்கள் என ரசிகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.